சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
Reported by Ada Derana
16 hours ago
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, பொலிஸ் அதிகாரிகள் குழுவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்றம் இன்று (28) இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகள் குழுவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டார்.
இந்த வழக்கு இன்று (28) பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.