சரித் அபேசிங்க மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்
Reported by Ada Derana
8 hours ago
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேகநபர் சரித் அபேசிங்க மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மூன்று சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கிய நிலையில், மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) முற்பகல் பிணை வழங்கப்பட்டனர்.
ரகித்த ராஜபக்ஷ மற்றும் மற்றொரு சந்தேகநபர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், அவர் மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.