வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் வீதிக்குச் சூட்டி வைப்பு
Reported by Ada Derana
5 days ago
யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை முன்பாக உள்ள வீதிக்கு புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் சூட்டப்பட்டு, பெயர்பலகை இன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராகவும், இந்திய வயலின் வித்துவான் டாக்டர் எல். சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்புறமுள்ள வீதி, புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் லட்சுமி நாராயணாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
இன்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பெயர்பலகையை திறந்து வைத்தார்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த வயலின் வித்துவான் டாக்டர் எல். சுப்ரமணியம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பெயர்பலகை திரைநீக்கத்தில் பங்கேற்றனர்.
இசை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலர், கலாசார ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் இசைத்துறை பங்களிப்பை நினைவுகூர்ந்தனர்.